35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து குதித்த மாணவி!

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்த பெண்மணி அலானா கட்லான்ட். இவருக்கு வயது 19. இவர் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இதனையடுத்து, அலானா தொழில் முறை பயிற்சிக்காக ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான மடாஷ்கருக்கு சென்று அங்குள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவில் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

இதனையடுத்து கடந்த 25-ம் தேதி, இவர் உயிரினங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ள அந்நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.  முடிந்ததும், மீண்டும் விமானத்தில் அஞ்சாஜாவிற்கு புறப்பட்டார்.

unknown node

இந்நிலையில், இவர் பயணித்த விமானம் சுமார் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, அலானா தனது இருக்கையில் இருந்து எழுந்து, விமானத்தின் கதவை திறந்துள்ளார். இவரது இந்த செயல் பயணிகளை பதற்றம் அடைய செய்தது.

என்ன நடக்கிறது என அவர்கள் சுதாரிப்பதற்குள்ளாக, அவர் விமானத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றுள்ளார். உடனடியாக அவரது அருகில் இருந்தவர், அலானா-ன் கால்களை கெட்டியாக பிடித்து கதவை மூட முயன்றார்.

ஆனால் அதையும் மீறி அலானா குதித்து விட்டார். இவரது உடல் இன்னும் கண்டெடுக்கப்படாத நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.