கத்தியால் தாக்கியதாக கூறி ஆஸ்திரேலிய காவல்துறையால் தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த தமிழகத்தை சேர்ந்த நபர் ஒருவர் ஆஸ்திரேலிய காவல்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய காவல்துறை முதல் தகவல் அறிக்கையில, தலைநகர் சிட்னியில் உள்ள ஓர் ரயில் நிலையத்த்தில் தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ரயில்வே துப்புரவு பணியாளரை கத்தியால் தாக்கியதாகவும்,
அதனை அடுத்து, அதே கத்தியை கொண்டு காவல்துறையினரை தாக்க முகமது சையது அகமது முற்பட்டதாகவும், இதன் காரணமாக தான் தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. முகமது சையது அகமது மீது 2 குண்டுகள் பாய்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் அவர் எதற்காக துப்புரவு பணியாளரை தாக்கினார்.? முகமது சையது அகமது தமிழகத்தில் எந்த ஊரை சேர்ந்தவர் .? என்ன பணி செய்து வருகிறார் என முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.