உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 18 வது நாளாக இன்று நீடித்து வருகிறது. தொடரும் இந்த தாக்குதலால், இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். மேலும், இந்த போரினால் இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகியவற்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது.
unknown node