இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் விரைவில் வெளியேறுங்கள்...! அமெரிக்க அரசு அறிவுறுத்தல்...!

The US government has advised Americans in India to return to the US soon as the spread of corona virus is high in India.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பாதிக்கப்படுகின்றனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்து போராடும் இந்தியாவிற்கு, சில நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் விரைவில் அமெரிக்கா திரும்புமாறு, அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த 100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த போதுமான மருத்துவ வசதிகள் இல்லை, எனவே எவ்வளவு விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற முடியுமோ, அவ்வளவு விரைவாக வெளியேறுமாறு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.