என்னது அணு ஆயுத சோதனையில் ஈடுபடுகிறோமா? டிரம்புக்கு பதிலடி கொடுத்த சீனா!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வைத்த குற்றச்சாட்டுக்கு சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.

china donald trump

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்திய CBS ‘60 மினிட்ஸ்’ நிகழ்ச்சி பேட்டியில், ரஷ்யா, சீனா, வட கொரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். “ரஷ்யா சோதனை செய்கிறது, சீனா செய்கிறது, ஆனால் அவர்கள் அதைப் பற்றி பேசுவதில்லை. நாங்கள் திறந்த சமூகம், பேசுவோம். நான் அமெரிக்காவை பின்தங்க வைக்க மாட்டேன். நிச்சயமாக வட கொரியா சோதனை செய்கிறது, பாகிஸ்தானும் செய்கிறது” என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக, அமெரிக்காவும் 33 ஆண்டுகளுக்குப் பிறகு அணு சோதனைகளை மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, உலக அணு சமநிலையை பாதிக்கும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். ஆனால், டிரம்பின் குற்றச்சாட்டுக்கு சீனா உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், “சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடு. அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளோம்” என்று தெரிவித்தார்.

சீனா தானா அணு சோதனை தடை விதித்துள்ளதாகவும், அணு பரவல் தடுப்பு ஒப்பந்தங்களை (NPT) கடைப்பிடிப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். “அணு சோதனை தடைக்கு சீனா உறுதியாக உள்ளது. அமெரிக்கா உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று வாஷிங்டனுக்கு கேள்வி எழுப்பினார். சீனா தனது அணு திட்டங்கள் தற்காப்பு மட்டுமே என்று உறுதிப்படுத்தியுள்ளது. டிரம்பின் குற்றச்சாட்டுகள், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், வட கொரியாவை மையமாகக் கொண்டுள்ளன. “அவர்கள் தங்கள் சோதனைகளை பேசுவதில்லை, நாங்கள் திறந்த சமூகமாக பேசுகிறோம்” என்று டிரம்ப் கூறி, அமெரிக்காவின் சோதனை மீண்டும் தொடங்குவதை கூறினார்.

மேலும், இது, 1992-ல் அமெரிக்காவின் அணு சோதனை தடைக்குப் பிறகு முக்கிய மாற்றம். வட கொரியா 2017-ல் சோதனை செய்ததே 21ஆம் நூற்றாண்டின் கடைசி உறுதிப்படுத்தப்பட்ட சோதனை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ரஷ்யா மற்றும் சீனாவின் அணு திட்டங்கள் தற்காப்பு என்று அவர்கள் மறுக்கின்றனர்.முடிவாக, டிரம்பின் குற்றச்சாட்டு சர்வதேச அணு போட்டியை தீவிரப்படுத்தலாம்.