சூடானில் போர் நிறுத்ததை மீறி இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல்.!!

சூடான் தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து சூடான் மக்கள் வெளியேறும் நிலையில் இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு.

சூடான் தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து சூடான் மக்கள் வெளியேறும் நிலையில் இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு.

சூடானில் ராணுவ மோதல்

சூடான் நாட்டில் ராணுவத்துக்கும், துணை ராணுவ ஆதரவு படையினருக்கும் இடையே கடந்த சில நாட்களாகவே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில், துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்கள் நடந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலமும் பயங்கரமாக தாக்குதல் நடந்து வருகிறது.

unknown node

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மோதலில் கிட்டத்தட்ட  270 பேர் உயிரிழந்துள்ளனர்.  2,600 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் கேரளாவைச் சேர்ந்தவ ஆல்பர்ட் அகஸ்டீன் என்ற இந்தியர் ஒருவர் அடங்குவர்.

unknown node

இந்தியர்கள் வசிக்கும் பகுதியில் தாக்குதல்

இந்நிலையில், இந்த போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ள நிலையில், உம்துர்மன் பகுதியில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியாகியுள்ளது. மேலும், சூடானில்  போர் நிறுத்தத்தை மீறி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தற்போது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து சூடான் மக்கள் வெளியேறும் நிலையில், இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். வீட்டை விட்டி வெளியே கூட வரமுடியாத அளவிற்கு உள்ளனர். சரியான சாப்பாடு இல்லாமல் தண்ணீர் கூட இல்லாமல் சீரமபடுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் போதுமான பாதுகாப்பு இல்லை எனவும், அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.