நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்.! 98 பேர் நிலைமை என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சுக்குநூறாக உடைந்த கண்ணாடிகள்.

new york bus accident

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், சுக்குநூறாக உடைந்த கண்ணாடிகள்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் டபுள் டெக்கர் பேருந்தும் நகரப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 98 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதில், 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 50 பேர் சுற்றுலாப்பயணிகள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.