வியூகத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் சீனா –இந்தியாவை எச்சரிக்கும் திபெத் தலைவர்

லடாக்கில் சீனாவின் நடவடிக்கையானது வியூகத்தின் ஒரு பகுதிதான் என மத்திய திபெத் நிர்வாக தலைவர் லோப்சாங் சங்காய் எச்சரித்துள்ளார்.

லடாக்கில் சீனாவின் நடவடிக்கையானது வியூகத்தின் ஒரு பகுதிதான் என மத்திய திபெத் நிர்வாக தலைவர் லோப்சாங் சங்காய் எச்சரித்துள்ளார்.

இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் எல்லை விவகாரத்தில் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கடந்த திங்கட்கிழமை இந்தியா மற்றும் சீனா ராணுவம் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இரு நாடுகளும் இந்த மோதல் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தான் சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் பிரத்தியேகமாகப் பேசியபோது  மத்திய திபெத் நிர்வாக தலைவர்லோப்சாங் சங்காய் கூறுகையில், திபெத் சீனாவால் ஆக்ரமிக்கப்பட்டபோது, மாவோ சேதுங்(Mao Zedong) , இதர சீன தலைவர்களும் திபெத் என்பது உள்ளங்கை, அதை ஆக்கிரமிப்பது கட்டாயம். அதன் பிறகு, நாம் 5 விரல்களில் கவனம் செலுத்த வேண்டும்  என கூறினார்.

அந்த 5 விரல்களில் முதல் விரல் லடாக். அடுத்து நேபாளம், பூடான், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம். கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் நடந்த சம்பவம் மற்றும் தற்போது லடாக்கில் நடைபெறும் சம்பவங்கள் இந்த வியூகத்தின் தொடர்ச்சி, இது குறித்து தான் கடந்த 60 ஆண்டுகளாக திபெத்திய தலைவர்கள் இந்தியாவை எச்சரித்து வருகிறார்கள் என லோப்சாங் சங்காய் கூறினார்.