இலங்கையில் அனைத்து கட்சி ஆட்சி அமையும் சூழல் உருவாகி உள்ளதால், அதற்கு வசதியாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்ய உள்ளனர் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது.
இலங்கையில் தற்போது நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே வருகிறது. ஆதலால், ஆளுங்கட்சியில் முக்கிய பதவிகளில் இருக்கும் பிரதமர், அதிபர் என பலரும் மக்கள் கண்ணில் படாமல் தப்பித்து ஒளிந்து கொண்டு இருக்கின்றனர்.
இந்த சமயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா செய்து விட்டார். அதிபர் கோத்தபய ரஜாபக்சே ராஜினமா செய்து விடுவார் என கூறப்படுகிறது.
ஆதலால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அனைத்து கட்சி ஆட்சியை செயல்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி, இலங்கை அமைச்சரைவில் உள்ள அனைத்து அமைச்சர்களும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய உள்ளதாக முடிவு எடுத்துள்ள்ளதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.