உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனால் பல்வேறு நாடுகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது இணையதள பக்கத்தில் விடியோவாக வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், இங்கிருந்தே அலுவலக பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதில் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதற்க்கு முன்னர் பிரிட்டன் இளவரசர் சார்லஸிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
unknown node