உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டரை கோடியை கடந்துள்ளது.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது, தற்பொழுது வரை தீவிரத்தை குறைத்து கொள்ளாமல் பரவிக் கொண்டே செல்லும் கொரோனா பாதிப்பு இதுவரை உலகம் முழுவதிலும் 25,900,741 பேருக்கு பரவி உள்ளது. இவர்களில் 861,251 பேர் உயிரிழந்துள்ளனர்.
18,193,632 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 260,004 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,899 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,845,282 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தனித்து இருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.