இங்கிலாந்தை குறிவைக்கும் கொரோனா.! ஒரே நாளில் 938 பேர் உயிரிழப்பு.!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில்

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் 1,519,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 88,531 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 330,877 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சை தொடர்து வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 938 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 828 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 108 நோயாளிகள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,097 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 60,733 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

unknown node