3.06 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.06 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.23 கோடியாக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 3.06 கோடியாக அதிகரித்துள்ளதுடன், குணமாகியவர்கள் எண்ணிக்கையும் 2.23 கோடியாக உள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகளவில் 30,697,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 956,445 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 22,339,875 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் 315,130 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,465 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,400,036 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3.06 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?