அமெரிக்காவில் 21 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

அமெரிக்காவை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு.

அமெரிக்காவை அதிர வைக்கும் கொரோனா பாதிப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில்,  7,732,948 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  428,248 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் அங்கு,  2,116,922 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 116,825 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் அமெரிக்காவில்,  791 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 27,221 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.