Diwali : வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடடிய ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜில் பிடன் ஆகியோர் திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிலையில் தீபாவளியை கொண்டாடடினர்.
ஜார்ஜ் புஷ் நிர்வாகத்தின் போது இருந்தே வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
“இருளை அகற்றி உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை தீபாவளி நினைவூட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான நிகழ்வை இன்று வெள்ளை மாளிகையில் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று பைடன் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Diwali is a reminder that each of us has the power to dispel darkness and bring light to the world.
It was my pleasure to celebrate this joyous occasion at the White House today. pic.twitter.com/ikgEhe9Uh4
— President Biden (@POTUS) October 25, 2022