சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை. – இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுவோர் இனி வெளியேற்றப்படுவார்கள் என இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துளளார் . நேற்று லண்டனில் நடந்த நிகழ்வில் பேசியபோது ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத குடியேற்றம் :இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வழங்கப்படும்.
நிரந்தர தடை :இதனை குறிப்பிட்டு பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய உத்தரவுகளில் டாப் 5 இடத்தில் இருப்பது சட்டவிரோத குடியேற்றத்திற்கு நிரந்தர தடை விதிப்பது தான் எனவும் அவர் கூறியுள்ளர்.
இனி இங்கே இடமில்லை :சில நீர்நிலைகளில் படகுகள் மூலம் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை. அவர்கள் திருப்பி அந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.