நேபாளத்தில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிலநடுக்கம்.! 6 பேர் பலி.! டெல்லி வரையில் அதிர்வு...

நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலி, மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் 6.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலி, மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நேபாளம் தலைநகர் காத்மன்ட் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் தோட்டி மாவட்டத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் பலியாகியுள்ளனர் என தோட்டி மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இதே பகுதியில் நேற்றிரவு 9.07 மணிக்கு 5.7ரிக்டர் அளவும், 9.56 மணிக்கு 4.1ரிக்டர் அளவும் என இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. நேபாளத்தின் பிரதமர் இது குறித்து கூறும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

unknown node