செர்பியா நாட்டில் இன்று அதிகாலையில் காரில் வந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த சூட்டில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.
மர்ம நபர் ஒருவர் செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட் அருகே துபோனா இடத்தில் நகரும் காரில் இருந்தவாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இயந்திர துப்பாக்கியால் ஈவு இரக்கம் இன்றி கண்மூடித்தனமாக சுட்டதில் அங்கிருந்த பொது மக்களில் 8 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். சந்தேக நபரை கைது செய்துள்ளதாக செர்பிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.
unknown nodeஒரு வாரத்திற்குள் செர்பியா நாட்டில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை போல கடந்த 2 நாட்களுக்கு முன்பு 7ஆம் வகுப்பு பயிலும் மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தான படிக்கும் பள்ளிக்கு சென்று 8 மாணவர்களையும் சுட்டு கொலை செய்தான் அவனையும் காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
