பாதுகாப்பு அச்சுறுத்தல்.! டிக்டாக் செயலியை தடை விதித்த பிரான்ஸ்...

சீன பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை, பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது. பயனர்களின் விபரங்களை அது சேகரிப்பதாக தகவல்

சீன பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை, பாதுகாப்பு காரணங்களுக்காக பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு வருகிறது. பயனர்களின் விபரங்களை அது சேகரிப்பதாக தகவல் வந்ததையொட்டி இந்த முடிவை அந்தந்த நாடுகளின் அரசுகள் இந்த முடிவை எடுத்துள்ளது. அந்த வகையில், தற்பொழுது பிரான்ஸ் நாடாளுமன்றம் டிக்டாக்கை முடக்கியுள்ளது.

அட ஆமாங்க… பொதுத்துறை ஊழியர்களின் தொலைபேசிகளில் டிக்டாக் செயலியை தடை செய்துள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று, பிரான்ஸ் பொது சேவை அமைச்சர் ஸ்டானிஸ்லாஸ் குரினி, சீனாவுக்குச் சொந்தமான பொழுதுபோக்கு செயலியான TikTok இனி அரசு ஊழியர்களின் தொலைபேசிகளில் அனுமதிக்கப்படாது என்று அறிவித்தார்.

இதற்கிடையில், அமெரிக்கா, கனடா, பெல்ஜியம், ஐரோப்பிய ஆணையம் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதிகாரப்பூர்வ சாதனங்களில் டிக்டாக்கின் பயன்பாட்டை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.