கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமாடியுள்ளார்.
கடந்த வருடம் முழுவதும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்ட நிலையில், பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனடா நாட்டை சேர்ந்த பிரபல இசை கலைஞரும், நடன கலைஞருமான குர்தீப் பாந்தர் என்பவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். கொரோனா தடுப்பூசி போட்ட மகிழ்ச்சியில், அதனை கொண்டாடும் விதமாக பனியால் உறைந்து போன ஏறி ஒன்றில், பஞ்சாபின் பாரம்பரிய நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node