சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனை பிணவறைகள்! மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை.!

By

சீனாவின் மருத்துவமனையில் கொரோனா நோய்த் தொற்றினால்  பிணவறைகள் நிரம்பி வருகின்றன என தகவல்.

சீனாவில் மீண்டும் பெருகிவரும் கொரோனா நோய்த் தொற்றினால், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. மேலும் உயிரிழப்புகள் அதிகரித்து பிணவறைகள் நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்த வீடியோ வெளியாகியுள்ளது. மருத்துவமனையில், ரத்தம் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. வயது முதிர்ந்தவர்கள் அதிகமாக உயிரிழந்து வருவதாகவும், இன்னும் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரபூர்வமாக இன்னும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

Dinasuvadu Media @2023