உலகளவில் 3.24 கோடிக்கும் அதிகமான மக்கள் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே சென்றாலும், குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்பொழுது உலகளவில் 32,413,887 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23,928,589 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களில் 987,742 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 7,495,455 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் புதிதாக 314,855 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர், 5,872 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.