உலகளவில் இதுவரை கொரோனா பாதிப்பு எவ்வளவு? உயிரிழப்பு எவ்வளவு?

உலகளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 2.04 லட்சமாக உள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு இதுவரை 2.04 லட்சமாக உள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. தற்பொழுது வரை உலகம் முழுவதிலும் 24,051,170 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 822,728 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர 16,600,925 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

தற்பொழுது மருத்துவமனைகளில் 6,627,517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் கொரோனாவால் புதிதாக 248,166 பேர் பாதிக்கபட்டுள்ளனர். மேலும் ஒரே நாளில் 6,056 பேர் உயிரிழந்துள்ளனர்.