சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால், தனது தோல்வியை டிரம்ப் ஏற்றுக்கொள்ளவில்லை.
தான் தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், ஜனநாயக கட்சியினர் மோசடி செய்து விட்டதாகவும் அவர் கூறி வருகிறார். இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிரம்ப் நேற்று டுவிட்டரில் தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக பதிவிட்டுள்ளார். ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை போலியானது எனவும் குற்றம்சாட்டி உள்ளார்.
unknown nodeunknown node