நான் தற்கொலை செய்து கொண்டால் யாரும் நம்ப வேண்டாம்..எலன்மஸ்க் பதில்..!

Default Image

உலகின் மிக பெரிய பணக்காரரான எலன்மஸ்க் தனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று ட்விட்டில் தெரிவித்தார்.

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன்மஸ்க், ட்விட்டரில் நடந்த நேர்காணலின் போது தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இல்லை, தற்கொலை செய்துக்கொண்டேன் என்றால் அதை நம்ம வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர்-ல் நடந்த நேரடி கேள்வி பதில் நிகழ்வில் அவரது மன நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகள் இருந்தன. 51 வயதான எலன் மஸ்க்கிற்கு பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்ட நிலையில் மர்மமான முறையில் ஏற்படும் திடீர் மரணம் தனது சொந்த செயலாக இருக்காது என்று ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதே கேள்வி பதில் நிகழ்வின் பொது கலந்து கொண்ட ஒருவர் தற்கொலை பற்றிக் கேட்டுள்ளார்.

அதற்கு “எனக்கு தற்கொலை எண்ணம் எதுவும் இல்லை, நான் தற்கொலை செய்து கொண்டேன் என்றால் அது உண்மையல்ல” என்று மஸ்க்  பதிலளித்துள்ளார். இந்த நேரலையில் சுமார் 1.8 மில்லியன் மக்கள் கலந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்