”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

தொடர்ந்து நான்கு நாட்களாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த தாக்குதல்களை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

IndiaPakistanWarUpdates

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலில் அறிவித்தார். இதையடுத்து, இந்தியா மாற்றம் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அதனை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். இருநாட்டு ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாட்டு எட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை இயக்குநர் இன்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ தலைமை இயக்குநரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்துவதை இந்திய நேரப்படி, இன்று மாலை 5 மணி முதல் போர்நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக, இரு நாடுகளின் டி.ஜி.எம்.ஓ., அதிகாரிகள் மே 12ம் தேதி பேச்சு நடத்துவ என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும், இந்தியாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் செய்வதாக பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இசாக் தார் அறிவித்துள்ளார். அவர் எக்ஸ் பக்க பதிவில், ”’இந்தியாவும், பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமைக்கு எந்த குந்தகமும் ஏற்படாமல், தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்புக்கு பாகிஸ்தான் பாடுபடும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war