2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார்.
ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் உள்ள ராணுவ தளத்தின் மீது ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது.ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளதால் இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது.
unknown nodeஇந்நிலையில் அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்செய்து உள்ளார்.”அதில் 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குலில் ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இது குறித்து நாளை அறிக்கை வெளியிடுவேன் என கூறி உள்ளார். எங்களிடம் மிகவும் சக்தி வாய்ந்த அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என கூறினார். மேலும் அதில் “ஆல் இஸ் வெல் “என்று பதிவிட்டுள்ளார்.