இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு ரகசியங்கள் உள்ளதா? ஓரின ஈர்ப்பாளர்கள் வெளியிட்ட திருமண புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

Default Image

அஞ்சலி சக்ரா மற்றும் சுந்தாஸ் மாலிக் இருவரும் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் வைத்து இவர்களது திருமணத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஓரின ஈர்ப்புடைய இந்த பெண்களுக்கு இடையே மறைந்திருக்கும் இன்னொரு ரகசியம் என்னவென்றால், அஞ்சலி சக்ரா என்பவர் இந்தியாவை சார்ந்த பெண். சுந்தாஸ் மாலிக் என்பவர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்ணாவார்.

மேலும் அஞ்சலி இந்து மதத்தை சேர்ந்தவர். சுந்தாஸ் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் பாரம்பரிய உடை அணிந்து, சிரித்தபடியே பல புகைப்படங்களை, ‘நியூயார்க் லவ் ஸ்டோரி’ என்று பெயரிட்டு ட்வீட்டரில் பதிவிட்டுள்ளனர். இவர்களது புகைப்படங்களுக்கு 41-க்கும் மேற்பட்ட லைக்குகள் கிடைத்துள்ளது. இவர்களது புகைப்படங்களை மற்றவர்களும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்