இஸ்ரேல் பிரதமருக்கு இந்தியா மீது உள்ள சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது என பிரதமர் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நாடு முழுவதும் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பல நாட்டு தலைவர்களும் இந்தியாவிற்கு தங்களது சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமைகொள்ள பல உள்ளன ”எனக்கூறி இந்திய மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவரது வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரதின வாழ்த்து தெரிவித்த எனது நண்பன் நெதன்யாகுக்கும் அற்புதமான இஸ்ரேல் மக்களுக்கும் நன்றி. இந்தியா மீது உள்ள இஸ்ரேல் பிரதமரின் சிறப்பான அன்பு தெளிவாக தெரிகிறது. மேலும் இஸ்ரேலுடன் அதிகரித்துவரும் வலுவான உறவுகள் குறித்து இந்தியா பெருமிதம் கொள்கிறது எனவும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
unknown node