ஆர்ச்சர் கடவுளா.? "ஜோ"... அன்றே கணித்தார் ஆர்ச்சர்.!

ஆர்ச்சரின் 6 ஆண்டுக்கு முன் 'ஜோ' என்ற ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆர்ச்சரின் 6 ஆண்டுக்கு முன் ‘ஜோ’ என்ற ட்வீட் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .

இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட ஒரு ட்வீட் செம்ம ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை, இவர் செய்திருந்த பல ட்வீட்கள் ட்ரெண்டாகி உள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடியின் 21 நாள் ஊரடங்கு உத்தரவை “கணிப்பது” முதல் 2019 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரை முன்னறிவிப்பது வரை, ஆர்ச்சருக்கு அந்தத் துறையில் ஒரு சாமர்த்தியம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது, ஜனநாயகக் கட்சி பைடன் புதிய அமெரிக்க ஜனாதிபதியாக வெளிவந்த உடனேயே, ஆர்ச்சரின் அக்டோபர் 4, 2014 ஆம் ஆண்டின்”Joe” என்ற ட்வீட் இணையதளத்தில் செம்ம வைரலாகி வருகின்றது.

unknown node

இதனை, ஆர்ச்சர் 2014 ஆம் ஆண்டிலே ஜோ பைடன் அதிபராவார் என்று கணித்தாரா…?  என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.