மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மேலும் 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக, உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்பத் துறையான, மைக்ரோசாப்ட், கூகுள், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள், தனது ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இதில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
இந்த நிறுவனம் குறித்த புதிய தகளின்படி, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள மைக்ரோசாப்ட் பெல்லூ மற்றும் ரெட்மாண்டில் அலுவலகங்களில் பணி புரியும் 559 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதுவரை, இந்நிறுவனம் வாஷிங்டன் சியாட்டில் பகுதியில் மட்டும் 2,743 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாம். ஏற்கனவே, இந்தாண்டு ஜனவரி மாதத்தில் 10,000 பேரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், இந்நிறுவனத்தில் மொத்தம் 2,20,000 பணியாளர்கள் இருந்தனர், ஆனால் இப்போது பணிநீக்கங்கள் காரணமாக அதன் பணியாளர்களில் 5 சதவீதம் குறைந்துள்ளதாம்.