மக்களே மிஸ் பண்ணிடாதீங்க...! பூமிக்கு அருகே விண்கல் மழை... வெறும் கண்களால் பார்க்கலாம்.!

ஒவ்வொரு ஆண்டும் தெரியக்கூடிய 'லிரிட் விண்கல் மழை' இன்று இரவு வானத்தில் தெரிகிறது. இந்த அறிய காட்சி, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை தெரியும் எனவும், ஏப்ரல் 21

ஒவ்வொரு ஆண்டும் தெரியக்கூடிய ‘லிரிட் விண்கல் மழை’ இன்று இரவு வானத்தில் தெரிகிறது. இந்த அறிய காட்சி, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை தெரியும் எனவும், ஏப்ரல் 21 மற்றும் ஏப்ரல் 22 ஆகிய தேதிகளில் இரவு நேர்நகளில் மட்டும் அது உச்சம் பெறும் (மிகவும் பிரகாசமாக தெரியும்) என்று நாசா தெரிவித்துள்ளது. முக்கியமாக, இந்த அபூர்வ விண்கல் மழையை தமிழ்நாட்டிலிருந்து நம்மால் வெறும் கண்களால் கண்டு ரசிக்க முடியும்.

unknown node

லிரிட் விண்கல் மழை என்பது என்ன:

லிரிட் விண்கல் மழை என்றால், நாம் மீது பெய்யகூடிய மழை அல்ல.. அதாவது, வால் நட்சத்திரங்கள் சென்ற பாதையில் அது விட்டுச் சென்ற தூசி துகள்கள், விண்வெளியில் காற்று இல்லாததால் எங்கும் போகாமல் ஒரே இடத்தில் தஞ்சம் அடையும். இதனால், பூமி இந்த துகள்கள் இருக்கும் பாதை அருகே நகரும் பொழுது, அந்த துகள்கள் புவி ஈர்ப்பு  விசையினால் ஈர்க்கப்பட்டு விண்கல் மழையாக பூமிக்கு அருககே ஒளிரும்.

unknown node

ஆயிரக்கணக்கான சிறு சிறு துகள்கள் ஒன்றாக கூடி, புவியை சுற்று வருகையில் நமக்கு அது  விண்கல் மழை போல் காட்சியளிக்கும். இது பற்றி நாசாவின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டு ஏப்ரலில் நிகழும் இந்த லிரிட் விண்கல் மழை வினாடிக்கு 29 மைல் வேகத்தில் வானத்தில் ஓடுகின்றன.

unknown node

இன்று இரவு இந்தியாவில் எங்கு பார்க்கலாம்:

லிரிட்ஸ் விண்கல் மழையை இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பார்க்கலாம். டெல்லி, கொல்கத்தா மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் இரவு 8.30 மணியளவில் விண்கல் மழை உச்சம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.