காத்மாண்டு :நேபாள அரசுக்கு எதிராக அந்நாட்டு இளைஞர்கள் கருத்து பரப்புவதாக கூறி சமூக வலைத்தளங்களை கட்டுபடுத்த அரசு முடிவெடித்த நிலையில், மிகப்பெரிய கலவரம் வெடித்தது. இதன் விளைவாக, நேபாள அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
ஆம், நேபாளத்தில் இளைஞர்களின் புரட்சியால் தலைகீழ் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அமைச்சர்கள் சிலர் ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதி ராம் சந்திர பவுடேல் ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைக்கு ஆட்சியை ராணுவம் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது நாளாகத் தொடரும் வன்முறையில் நாடாளுமன்றக் கட்டிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ராம் சந்திர பவுடலும் ராஜினாமா செய்துள்ளார்.
