பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பணம் அனுப்ப கூடாது – நிதி கண்காணிப்பு குழு எச்சரிக்கை!

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானிலிருந்து யாரும் பணம் அனுப்ப கூடாது என்றும் பாக்கிஸ்தான் அரசு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தானிலிருந்து யாரும் பணம் அனுப்ப கூடாது என்றும் பாக்கிஸ்தான் அரசு இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.பாரிஸ் நாட்டை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச நிதி கண்காணிப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில்,உலகையே அச்சுறுத்தி வரும் தீவிரவாதிகளுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நிதி உதவி செய்வதை பாகிஸ்தான் அரசு தீவிரமாக செயல்பட்டு தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். வரும் செப்டம்பர் மாதத்திற்குள் துரிதமாக செயல்பட்டு இந்த நடவடிக்கையானது இருக்க வேண்டும் என்றும் இல்லையெனில், பாகிஸ்தான் ஆனது கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும் என்று கடும் எச்சரிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.