பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பிற்கு தூக்கு தண்டனை ரத்து.!

முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த  2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக

கடந்த டிசம்பர் 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது.

மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் முஷரப் செய்தார். விசாரித்த நீதிபதிகள்  மரண தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.

முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த  2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் அதிபராக பதவியேற்றார்.பின்னர் கடந்த 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார்.இந்த நெருக்கடி நிலை டிசம்பர் 15-ம் தேதி வரை அமலில் இருந்தது.

இதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் அதிபராக பதவியேற்றார். இவர் பதவி ஏற்றதும் தனது ஆட்சியை புரட்சி மூலம் கைப்பற்றியதாகவும் , நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்கும் முஷரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது.

உடல் நிலை குறைவால் முஷரப் கடந்த 2016-ம் ஆண்டு சிகிச்சைக்காக துபாய் சென்றார். சிகிக்சைக்காக துபாய் சென்றவர் பின்னர் நாடு திரும்பவில்லை. ஒரு புது விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள முஷரப் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில்  உள்ள சிறப்பு நீதிமன்றத்தில்  3 நீதிபதிகள் கொண்ட அமர்வு  முஷரப் மீதான தேச துரோக வழக்கை விசாரித்து வந்த நிலையில் கடந்த டிசம்பர் 17-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி லாகூர் உயர்நீதிமன்றத்தில் முஷரப் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.இந்த மனு மீது விசாரித்த 3 பேர் கொண்ட அமர்வு முஷரப்பிற்கு எதிராக சிறப்பு நீதிமன்றம் அமைத்தது ‘அரசியலமைப்பிற்கு விரோதமானது’ என ஒருமனதாக கூறி  நீதிபதிகள் முஷரப்புக்கு விதித்த மரண தண்டனையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.