தஜிகிஸ்தானில் 4.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டில் இன்று காலை 11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தஜிகிஸ்தான் நாட்டில்  மார்ச் 19 (இன்று ) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், பூமிக்கு அடியில் 170 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 4.4 ஆகவும் இந்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது என என்று தேசிய நில அதிர்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது. இதுவரை இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதை போல் நேற்று ஈக்வடார் நாட்டின் கடற்கரை மாகாணமான கயாஸ் மாகாணத்தில்  ரிக்டர் 6.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.