ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..அதிர்ச்சியில் ஆழ்ந்த பொதுமக்கள்.!!

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Japan Earthquake

ஜப்பானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் உள்ள உயோசுவில் நகரின் வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் விளைவாக நாகானோ மற்றும் கனாசாவா நிலையங்களுக்கு இடையில் ஹோகுரிகு ஷிங்கன்சென் உட்பட சில ரயில் பாதைகள் நிறுத்தப்பட்டன.

மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் மேலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பானின் பொது ஊடக அமைப்பான NHK  வலியுறுத்தியுள்ளனர்.