கொரோனா பரவியதாக கூறப்பட்ட வுஹான் சந்தைக்கு ஆராய்ச்சி குழு செல்கையியல், அதற்கு முன்னரே சந்தையில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. என பேராசிரியர் குவோக்-யுங் யுயென் குற்றம் சாட்டியுள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது, சீனாவில் உள்ள வுஹான் நகரில் உள்ள சந்தையில் தோன்றியதாகவும், அங்கிருந்து தான் உலக நாடுகள் முழுக்க பரவியதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தோன்றியதாக கூறப்படும், வுஹான் நகரை ஆராய சென்ற ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவரும், நுண்ணுயிரியலாளர், மருத்துவருமான பேராசிரியர் குவோக்-யுங் யுயென் அண்மையில், பிபிசியிடம் கூறுகையில், ‘ கொரோனா பரவியதாக கூறப்பட்ட வுஹான் சந்தைக்கு ஆராய்ச்சி குழு செல்கையியல், அதற்கு முன்னரே சந்தையில் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டிருந்தது.’
மேலும், ‘ வைரஸ் பரவியதாக கூறப்பட்ட சூப்பர் மார்க்கெட் போன்ற முக்கிய இடங்கள் அனைத்தும் முன்னதாகவே சுத்தப்படுத்தப்பட்டு இருந்தன. இதனால், கொரோனா பரவியதற்கான காரணிகளை எங்கள் குழுவால் கண்டறியமுடியவில்லை. வுஹானில் உள்ளூர்க்காரர்கள் முன்னதாகவே ஆதாரங்களை மறைத்துவிட்டனர். சேகரித்த தகவல்களை உடனடியாக வெளியிட உள்ளூர் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.’ எனவும் பேராசிரியர் குவோக்-யுங் யுயென் கூறியுள்ளார்.