ரஷ்ய அதிபர் புதின் மரபுவழி கிறிஸ்மஸை கொண்டாடும் வகையில் ரஷ்ய தலைநகர் கிரெம்ளின் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையில் ஈடுபட்டார்.
ரஷ்ய அதிபர் புதின் மரபுவழி கிறிஸ்மஸை கொண்டாடும் வகையில் ரஷ்ய தலைநகர் கிரெம்ளின் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையில் தனியாக கலந்துகொண்டார். இந்த மரபு வழி கிறிஸ்துமஸ் விழா ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் தேதி கொண்டாடப்படும்.
கிறிஸ்தவ பாதிரியார்கள் தங்க அங்கி அணிந்து கொண்டு நீண்ட மெழுகுவர்த்திகளை ஏந்தி கிறிஸ்த்துமஸ் விழாவில் கலந்து கொண்டனர். உக்ரைன் மீதான தாக்குதல்களுக்கு பிறகு இந்த பரம்பரிய கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதால் மிக முக்கியமானதாக இரு பார்க்கப்படுகிறது .
ரஷ்ய வீரர்களின் சிறப்பான இராணுவ நடவடிக்கைகளை அதிபர் புடின் ஆதரித்து பேசினர். மேலும், சிறந்த, பன்முகத்தன்மை கொண்ட, உண்மையான துறவி பணி மிகவும் நேர்மையான மரியாதைக்கு உரியது எனவும் புடின் வாழ்த்து தெரிவித்தார்.