எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். அதற்கு, எலான் மஸ்க் தனது பாணியில் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களின் மிக முக்கிய இடத்தில் இருப்பவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், தன்னுடைய தொழிலில் ஈடுபாடாய் இருப்பது போல , தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் ஈடுபாடாய் இருப்பவர்.
தனக்கு, தன்னை பற்றி வரும் கருத்துக்களுக்கு பெரும்பாலும் பதில் அளித்து விடுவார். அப்படி தான், ஒரு நபர் , தனது டிவிட்டர் பக்கத்தில், எலான் மஸ்கின் சட்டையில்லா புகைப்படத்தை பதிவிட்டு, அதில், என்னுடைய பணம் இவர் கம்பெனியில் தான் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவர் இப்படி இருக்கிறார். என்பது போல பதிவிட்டு விட்டார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், நான் அடிக்கடி சட்டையை கழட்ட வேண்டிய சூழல் வரும். கம்பெனிகளை போல என பதிவிட்டு விட்டார். அதாவது, அவர் அடுத்தடுத்து பெரிய பெரிய நிறுவனங்களுடன் கைகோர்ப்பதை குறிப்பாய் அதில் பதிவிட்டு உள்ளார் என பலர் கூறுகின்றனர்.
unknown node