இலங்கை அரசு மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளாராம்.
இலங்கையில் அந்நிய செல்வாணி கடும் சரிவை நோக்கி சென்ற காரணத்தால், அத்திவாசியா பொருட்களின் விலை கடும் விலையேற்றம் கண்டது. ஆதலால், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருந்தது.
அதிலும், போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி போராடி, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நிலைமைக்கு சென்றனர். மேலும், உயர் பதவிகளில் இருந்த அரசியல் தலைவர்களின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. தீவைத்து கொளுத்தப்பட்டன.
இதனால், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பி சென்று விட்டார். தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார். அரசு மாளிகைகளில் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து விட்டனர்.
தற்போது அரசு மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேறுவதாக அறிவித்துள்ளாராம். மேலும் கொழும்புவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், இதனால் தற்போது இலங்கையில் அடுத்தடுத்து போராட்டங்கள் கொஞ்சம் தளர்வாகி இலங்கை பழைய நிலைக்கு திரும்பும் சூழல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.