வாஷிங்டன் : மத்திய கிழக்கில் கடந்த இரண்டு மாதங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதி (April Ceasefire) இன்று (ஜூன் 8, 2026) முற்றிலும் உடைந்து, ஒரு மாபெரும் போராக உருவெடுத்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைகளை வீச, அதற்குப் பலியாக இஸ்ரேல் ஈரானின் பொருளாதாரப் பகுதிகளைத் தாக்கி வருவதால் ஒட்டுமொத்த வான்வெளியும் போர்க்களமாக மாறியுள்ளது.
நிலைமை எல்லை மீறிச் செல்வதைக் கண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது 'Truth Social' பக்கத்தில் "இஸ்ரேலும் ஈரானும் தங்களுக்குள் மாறி மாறி நடத்திக்கொள்ளும் இந்த ஏவுகணைத் தாக்குதல்களை உடனடியாக (Immediately) நிறுத்த வேண்டும்" என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். "நான்தான் முடிவுகளை எடுப்பவன், நெதன்யாகு அல்ல" என்று டிரம்ப் எச்சரித்த சில மணி நேரங்களிலேயே இஸ்ரேல் இந்த விவாரத்தில் அமெரிக்காவையே அதிரவைக்கும் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.
ராணுவ முகாம்களைத் தாண்டி, இந்த முறை ஈரானின் பொருளாதார நரம்பைத் துண்டிக்கும் உத்தியை இஸ்ரேல் கையில் எடுத்துள்ளது.
தென்மேற்கு ஈரானின் குஜஸ்தான் மாகாணத்தில் உள்ள முக்கிய துறைமுக நகரான பண்டார்-இ-மஹ்ஷாஹரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'கருண் பெட்ரோகெமிக்கல்' நிறுவனத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலின் தீவிரத்தால் அந்தப் பிராந்தியத்தில் உள்ள ஒட்டுமொத்த 'மஹ்ஷாஹர் சிறப்புப் பொருளாதார மண்டலமே' (Special Economic Zone) அதிரடியாகப் புகைமண்டலமாக மாறி, அங்கிருந்த அனைத்துப் பணியாளர்களும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறி, ஈரான் உலக நாடுகளுக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்து 'அந்நியச் செலாவணி' (Hard Currency) ஈட்டும் மிக முக்கியமான நிதி ஆதாரமாக இந்த ஆலை விளங்கியது. இதைத் தகர்த்ததன் மூலம் ஈரானின் உள்நாட்டுத் தொழிற்துறையை இஸ்ரேல் முடக்கியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை "ஆபரேஷன் நஸ்ர்" என்ற பெயரில் இஸ்ரேலின் முக்கிய விமானப் படத்தளங்களான நெவாடிம் (Nevatim) மற்றும் டெல் நாஃப் (Tel Nof) மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது."இஸ்ரேல் நடத்தும் இந்த வெறிச்செயல்களுக்குப் பின்னால் அமெரிக்காவின் முழுமையான ஆதரவும் கொள்கைகளும் மறைந்துள்ளன. எனவே, இந்தத் தாக்குதல்களுக்கு வாஷிங்டன் நிர்வாகமே நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்" என ஈரான் அரசு பகிரங்கமாகக் கண்டித்துள்ளது.
மேலும், லெபனான் மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பழிவாங்க, சர்வதேச வர்த்தகத்தின் முக்கிய பாதையான செங்கடல் (Red Sea) வழியாக இனி எந்தவொரு இஸ்ரேலியக் கப்பல்களும் செல்லக் கூடாது என அதிரடித் தடை விதித்துள்ளனர். பாப் எல்-மண்டேப் ஜலசந்தியை முடக்கப் போவதாக அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை உலகளாவிய கடல்வழி வர்த்தகத்தையும், கச்சா எண்ணெய் விலையையும் அதிர வைத்துள்ளது.
