ஏரியில் விழுந்த தான்சானியாவின் விமானம்! வைரல் வீடியோ.!

தான்சானியாவின் ப்ரெசிசின் விமானம் ஏரியில் விழுந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

தான்சானியாவின் ப்ரெசிசின் விமானம் ஏரியில் விழுந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

43 பேருடன் சென்றதாகக் கூறப்படும் விமானம் தான்சானியாவின் மிகப்பெரிய நகரமான டார் எஸ் சலாமுக்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது மோசமான வானிலை காரணமாக தரையிறங்கும் போது புகோபா விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் உள்ள விக்டோரியா ஏரியில் விமானம் நேற்று விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 19பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 24 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் ஏரியில் மிதக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது பரவி வருகிறது. ஏரியில் முழுதுமாக விமானம் மூழ்கி அதன் இறக்கைகள் மட்டும் மிதக்கிறது.

தான்சானியாவின் பிரதமர் இது குறித்து பேசும்போது, மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஏரியில் தேடி வருகின்றனர், மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

unknown nodeunknown node