மெக்சிகோவில் புலம்பெயர்ந்தோர் தங்கி இருந்த குடியிருப்பு மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மெக்சிகோவில் உள்ள சியுடாட் ஜூவாரெஜ் நகரில் புலம்பெயர்ந்தோர் தங்குவதற்காககுடியிருப்புமையம் ஒன்று உள்ளது. அந்த புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு மையத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 39 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் 39 பேர் தீயில் கருகி இறந்துவிட்டதாகவும், மேலும் 29 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும். இந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் குடியிருப்பு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மெக்சிகோ அரசு விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளது.