பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு தீப்பிடித்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்கு சென்று. கொண்டிருந்த படகில் இரவு 10.40 மணிக்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 29 – பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களில் ஆறு மாத குழந்தை உட்பட குறைந்தது மூன்று குழந்தைகள் இருந்தனர் என மேயர் அர்சினா கஹிங் கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்தில் உயிர் தப்பிய 200-க்கும் மேற்பட்டோரை கடலோர காவல்படை மீட்டுள்ளனர். தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கப்பலில் அதிக சுமை ஏற்றியதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதபோலவே, கடந்த ஆண்டு மே மாதம், 134 பேரை ஏற்றிச் சென்ற அதிவேக படகில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.