இலங்கையில் ராட்ச பட்டன்களை ஒன்றாக கட்டி பறக்கவிட்ட இளைஞரை பட்டம் தூக்கி சென்றதால் பரபரப்பு.
இலங்கை யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் நடத்திய ராட்சச பட்டம் விடும் நிகழ்வு அதிர்ச்சியை உண்டாக்கி விபரீதத்தில் முடிந்தது. பருத்தித்துறை அருகே புலோகி பகுதியில் இளைஞர்கள் சிலர் பெரிய அளவிலான பட்டம் ஒன்றை வானில் பறக்கவிட்டனர். அப்போது பட்டம் வானத்தை நோக்கி பறந்த நிலையில், பட்டத்தின் கயிறை பிடித்திருந்த இளைஞர் எதிர்பாராத விதமாக மேலே தூக்கி செல்லப்பட்டார்.
இதனை பார்த்த அருகில் மற்ற இளைஞர்கள் கீழே குதிக்குமாறு அந்த இளைஞரை நோக்கி கூச்சலிட்டனர். சுமார் 40 ஆதி உயரம் வரை பறந்த இளைஞர் சில நிமிடங்களுக்கு பிறகு கீழே குதித்தார். கீழே குதித்த இளைஞர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு இளைஞரின் திக்..திக் நிமிடங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
unknown node