2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனிசியா ஆகிய நாடுகளில் பிற்பகலில் தெரியும். இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது.
பொதுவா நமது இந்தியாவில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என்பதை மத நம்பிக்கைகளோடு பார்க்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த நேரம் மத நம்பிக்கைகளின் படி பல்வேறு கட்டுப்பாடுகள் கூறப்படும். ஒரு வருடத்தில் 2 சந்திர கிரகணங்கள் மற்றும் 2 சூரிய கிரகணங்கள் வரும். அதேபோல , 2023 ஆம் ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணமானது ஹைப்ரிட் சூரிய கிரகணமாக இருக்கும் என நாசா சமீபத்தில் தெரிவித்துள்ளது. அதாவது ஹைபிரிட் சூரிய கிரகணம் என்பது கலப்பின சூரிய கிரகணம் என்பதாகும். இது ஒரு நூற்றாண்டில் ஒரு சில முறை மட்டுமே நிகழும் சம்பவமாகும்.
கலப்பின சூரிய கிரகணம் :
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும் போது கலப்பின சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன் காரணமாக சந்திரனின் நிழல் பூமியின் மீது விழுகிறது மற்றும் பூமியின் பல பகுதிகள் முற்றிலும் இருட்டாக மாறும். முழு கிரகணம் அல்லது பகுதி கிரகணம் போன்ற பல வகையான கிரகணங்கள் பூமியில் உருவாகும். ஆனால் இந்த கிரகணங்கள் நிகழும்போது, சூரியனின் வெளிப்புற வடிவம் பகுதியாகவோ அல்லது தெளிவாகவோ தெரியும்
சூரிய கிரகணம் எப்போது, எங்கு தெரியும்.?
ஏப்ரல் 20 கலப்பின சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா நேரப்படி இரவு 10.29 முதல் 10.35 வரையிலும், (இந்திய நேரப்படி மதியம் 02.29 to 02.35) வரையும், இந்தோனேசியாவில் அந்நாட்டு நேரப்படி, இரவு 11.23 PM முதல் 11:58 PM ( இந்திய நேரப்படி மதியம் 03.23 to 0358) வரையும் தெரியும். அதேசமயம், கிழக்கு திமோரில் 11:19 PM முதல் 11:22 PM EDT வரை ( இந்திய நேரப்படி மதியம் 03.19 to 03.22) வரையிலும் தெரியும். இந்தியாவில் கலப்பு சூரிய கிரகணம் தெரியாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.