விமான உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையை கண்டுபிடித்ததை அடுத்து விசாரணையைத் தொடங்கிய விமான நிறுவனம்.
துருக்கியில் உள்ள அங்காராவிலிருந்து ஜெர்மனியில் உள்ள டுசெல்டார்ஃப் நகருக்குச் சென்ற சன்எக்ஸ்பிரஸ் விமானத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. துருக்கி விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சாப்பிட்ட உணவில் பாம்பின் தலை துண்டிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதாவது, துருக்கியைச் சேர்ந்த சன் எக்ஸ்பிரஸ் என்ற விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சாப்பிட்ட உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலையைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
ஊழியர்கள் உணவு உண்ணும் போது உருளைக்கிழங்கு மற்றும் காய்கறிகளுக்கு இடையில் ஒரு சிறிய பாம்பின் தலை காணப்பட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், இந்த சம்பவம் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், விமானத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், எங்கள் விமானத்தில் எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை.
எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரும் வசதியான மற்றும் பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, உணவில் துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை கண்டறியப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணையை துருக்கி விமான நிறுவனம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node