அடேங்கப்பா...! ஆரம்ப விலை ரூ.42 லட்சம்...அதிர வைத்த ஆப்பிள் நிறுவனம்.!

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், ஒரு காலத்தில் ஒரு சிறப்பான ஸ்னீக்கர்களை உருவாக்கியது. இந்த ஸ்னீக்கர்கள் 1990-களின் நடுப்பகுதியில்

Apple-Made Sneakers

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள், ஒரு காலத்தில் ஒரு சிறப்பான ஸ்னீக்கர்களை உருவாக்கியது. இந்த ஸ்னீக்கர்கள் 1990-களின் நடுப்பகுதியில் ஆப்பிள் ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டது. ஆனால், அவை பொதுமக்களுக்கு விற்கப்படவில்லை.

1985 ஆம் ஆண்டில் 22,000 க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஊழியர்கள் இந்த பிராண்டிலிருந்து ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கியுள்ளனர். இப்போது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தனித்துவமான ஆப்பிள் ஸ்னீக்கர்களை பெறுவதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்பிள் லோகோ கொண்ட அந்த வெள்ளை நிற ஸ்னீக்கர்களின் ஏலம் நாளை Sotheby’s என்ற இணையத்தளத்தில் நடைபெறுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு தனித்துவமான காலனி என்பதால் அதிக விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Apple-Made Sneakers [ File Imag]

அதாவது, ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மக்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதை கருத்தில் கொண்டு, எப்படி ஐபோன் அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ? அதேபோல இந்த ஸ்னீக்கர்கள் 50,000 டாலர், இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம் ரூபாய் ஆரம்ப விலையாக இருக்கும் என கூறப்படுகிறது.