துருக்கி, இஸ்தான்புல் பயங்கர தீவிரவாத தாக்குதல் 6பேர் பலி, 81 பேர் படுகாயம்! வீடியோ வைரல்.!

துருக்கியின் இஸ்தான்புல்லில் பிரபலமான இஸ்திக்லால் அவென்யூவில், நடந்த  குண்டுவெடிப்பு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் பிரபலமான இஸ்திக்லால் அவென்யூவில், நடந்த  குண்டுவெடிப்பு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள பிரபலமான இஸ்திக்லால் அவென்யூவில், நேற்று பயங்கரமான குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து தெரியவில்லை எனவும் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்றும் ஒரு பெண் காரணமாக இருக்கலாம் என்றும்  சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலை தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் பொதுமக்கள் குண்டு வெடித்த சத்தம் கேட்டு அங்குமிங்கும் ஓடுகின்றனர், மேலும் ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்கின்றனர்.

இந்த குண்டுவெடிப்பில் 6பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 81 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே அறிவித்துள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து சந்தேகமுள்ள ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோயலு தெரிவித்தார். துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை  “பயங்கரவாதம்” என்று கூறியதுடன், அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

unknown nodeunknown node